தமிழகத்தில் கைத்தறி மற்றும் பின்னலாடை தொழிற்சாலைகள் நூல் விலை உயர்வால் பாதிக்கபடுவதால் மேலும் 6மாதகாலம் வரிசலுகை அளிக்குமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளோம் தமிழகத்தில் கோ ஆப் டெக்ஸ் விற்பனையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் விற்பனையை காரணம் காட்டி கடைகளை மூடவில்லை -




தமிழகத்தில் கைத்தறி மற்றும் பின்னலாடை தொழிற்சாலைகள் நூல் விலை உயர்வால் பாதிக்கபடுவதால் மேலும் 6மாதகாலம் வரிசலுகை அளிக்குமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளோம் தமிழகத்தில் கோ ஆப் டெக்ஸ் விற்பனையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் விற்பனையை காரணம் காட்டி கடைகளை மூடவில்லை - இலவச வேட்டி சேலை தமிழகத்தில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் உற்பத்தியும் துவங்கியுள்ளது என கைத்தறி, துணி நூல் ,கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜிவேலூரில் பேட்டி 

    வேலூர்மாவட்டம்,வேலூர் கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் 10 காய்கறிகள் அடங்கிய சிறப்பு  தொகுப்பு வழங்குவதை அமைச்சர் விஜய் பாலாஜி பின்னர்  வேலூர் மாவட்ட ஆட்சியர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொழில் முனைவோருக்கான வங்கி நிதி இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  
இந்த நிகழ்ச்சியில் மாநில கைத்தறி, துணி நூல் ,கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி கலந்துகொண்டு 
585 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 63 கோடியே 30 லட்சம் மதிப்பில் தொழில் முனைவோருக்கான வங்கி 
நிதி காசோலைகளை வழங்கினார்.

மேலும்  வேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பணிக்கு 3 தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.50 இலட்சம் மதிப்பில் 25 மின்கல இயக்க வாகனங்களை பயன்பாட்டிற்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சுகாதர்,வினோத் கண்ணா,சிந்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் 

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம்  கைத்தறி கதர் மற்றும் துணி நூல்துறை அமைச்சர்,நெசவாளர்களின் நலனைக் காக்க தமிழக அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த காலங்களை விட தற்போது கைத்தறி ரக மாற்றத்தின் மூலமாக உற்பத்தி இரட்டிப்பாக்கப்பட்டு, ரூ.1.87 கோடி மதிப்பிலான சேலைகளும், ரூ.1.87 கோடி மதிப்பிலான வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படஉள்ளது.நெசவாளர்களுக்கு 10% அடக்கவிலை மற்றும் 10%  அகலவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது இதன் மூலம் சுமார் 60,000 நெசவாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் பயனடைவார்கள்.
கைத்தறி மற்றும் பின்னலாடை தொழிற்சாலைகளின் நலன்கருதி, வரிவிலக்கு சலுகைகளைத் தொடர்ச்சியாக வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து மாநில அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த பிரதிநிதிகள் நேரடியாகவும் மனு அளித்துள்ளனர்.
கைத்தறி மற்றும் நெநசவாளர் துறையில் முறைகேடுகளில் ஈடுபடும் போலி சங்கங்கள் மற்றும் லெட்டர் பேட் அமைப்புகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.உண்மையான நெசவாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு  அதிகாரிகள் மூலம் துல்லியமான கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 கைத்தறித் துறையின் வியாபாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 10 புதிய விற்பனை நிலையங்கள்  திறக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப மேலும் பல புதிய மையங்கள் திறக்கப்படும். லாபமின்றி இயங்கும் பழைய நிலையங்களுக்குப் பதிலாக பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் புதிய கடைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.இலவச வேட்டி சேலை தமிழகத்தில் உள்ள நெசவாளர்களிடம் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்ய எடுக்கப்பட்டு உற்பத்தி நடந்து வருகிறது  விற்பனையை காரணம் காட்டி கோ ஆப் டெக்ஸ் மூடப்படவில்லை ஸ்டாலின் அவர்கள் மூத்தவர் அரசியல் தலைவர் இவ்வாறு தரக்குறைவாக இரண்டாம் தர தலைவர்களை போல் பேச கூடாது வேலூர் மாவட்டத்தில் பாலாறு மற்றும் பொதுப் பகுதிகளில் அனுமதியின்றி குப்பை கொட்டுவோர் மீது கடுமையான அபராதம் விதிக்கப்படும் எனஎன்றும் அமைச்சர் கூறினார்
Previous Post Next Post