குடியாத்தம் டெக்ஸ்டைல்ஸ் கூட்டுறவு நியாய விலை கடையில் 10 வகையான காய்கறிகள் ரூ.100-க்கு விற்பனை திட்டம் தொடக்கம்!

*குடியாத்தம், நவ.05:* வேலூர் மாவட்டம், குடியாத்தம் டெக்ஸ்டைல்ஸ் கூட்டுறவு நியாய விலைக் கடையில் 10 வகையான காய்கறிகள் ரூ.100-க்கு விற்பனை செய்யும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இணைச் சார்பதிவாளர் ஜெயப்பன் துரை, வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், வட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், வருவாய் ஆய்வாளர் சத்யா, மேலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதில் பொதுமக்களுக்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய பை ரூ.100-க்கு வழங்கப்பட்டது. இத்திட்டத்தால் குடியாத்தம் பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விலைவாசி உயர்வு காலத்தில் குறைந்த விலையில் காய்கறிகள் கிடைப்பது ஏழை, எளிய மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என பொதுமக்கள்  தெரிவித்தனர்.

 A. சரவணன்
 வேலூர் மாவட்ட செய்தியாளர்
Previous Post Next Post