ஒடுக்கத்தூரில் ரூ.1.35 கோடி மதிப்பில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் திறப்பு!



முதலமைச்சர் விஜய் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார் – மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், ஒடுக்கத்தூர் பேரூராட்சியில் ரூ.135 லட்சம் (ரூ.1.35 கோடி) மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக இன்று (04.11.2026) திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி பி.எஸ். லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் புதிய தீயணைப்பு நிலையத்தில் குத்துவிளக்கேற்றி, நிலையத்தைப் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு. த. வேலழகன், கே.வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ. தென்றல்குமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் திரு. வடிவேல் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

A. சரவணன்.
வேலூர் மாவட்ட செய்தியாளர் 
Previous Post Next Post