இராணிப்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 12ஆம் வகுப்பு தொழிற்கல்வி மாணவர்களுக்கான திறன் பயிற்சி: அதிகாரிகள் நேரில் ஆய்வு!


​இராணிப்பேட்டை, நவ. 11 – தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தொழிற்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் வழிகாட்டுதலின்படி, இராணிப்பேட்டை அரசுi தொழிற்பயிற்சி நிலையத்தில் 12ஆம் வகுப்பு தொழிற்கல்வி மாணவர்களுக்கான 13 நாட்கள் சிறப்புத் திறன் பயிற்சி நடைபெற்று வருகிறது.

​இப்பயிற்சியில் ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அம்மூர் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பூட்டுத்தாக்கு அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளைச் சார்ந்த 42 மாணவர்கள் கலந்துகொண்டு தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர்.

​பயிற்சியின் 10ஆம் நாளான இன்று, மாணவர்களின் செய்முறைப் பயிற்சியினை இராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைந்த கல்வித்திட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி ஷெரின் பாத்திமா மற்றும் வட்டார வள மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (தொழிற்கல்வி) திருமதி இராஜராஜேஸ்வரி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், மாணவர்களுக்குத் தேவையான அறிவுரைகளையும் ஊக்கத்தையும் வழங்கினர்.

​முன்னதாக, தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் திரு. டி. ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பயிற்சி அலுவலர் திரு. சாலமன், பயிற்றுநர் சீனிவாசன் மற்றும் ஜே.டி.ஓ. வாசுதேவன் ஆகியோர் பயிற்சியின் சிறப்பம்சங்கள் குறித்தும், அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்தும் விளக்கமளித்தனர்.

​இப்பயிற்சியினை தொழிற்கல்வி ஆசிரியர்களான ஆற்காடு முனைவர் க.வே. கிருபானந்தம், அம்மூர் திரு. தருமன் மற்றும் பூட்டுத்தாக்கு திரு. இராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்து மாணவர்களுக்கு வழிகாட்டி வழிநடத்தினர்.

​நிகழ்ச்சியின் இறுதியில், மாணவர்கள் ஆர்வமுடன் மேற்கொண்ட செய்முறைப் பயிற்சிகளைப் பார்வையிட்ட அலுவலர்கள், அவர்களின் திறமையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Previous Post Next Post