மேல்விசாரம் மின்வாரிய இளம் பொறியாளர் மீது லஞ்சப் புகார்: 8 ஆண்டுகள் ஒரே இடத்தில் நீடிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டு


ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விசாரம் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள மின்சார வாரிய அலுவலகத்தில், இளம் பொறியாளராக (JE)  சாதிக் பாஷா என்பவர் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வருகிறார்.

​இவர் மீது பராமரிப்புப் பணிகளைச் சரியாக மேற்கொள்வதில்லை, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உரிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை மற்றும் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடுகளில் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுகின்றன.

​அரசு மற்றும் மின்வாரிய விதிகளின்படி, குறிப்பிட்ட ஒரு பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றக் கூடாது என்ற நிலை உள்ளபோது, இவர் கடந்த 8 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நீடிப்பது எவ்வாறு சாத்தியம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

​எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, இவர் மீது உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
Previous Post Next Post