இக்கூட்டத்தில், பருவமழைக்காலத்தில் பரவக்கூடிய நோய்களை தடுப்பது குறித்தும், குடிநீரினால் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கு, தினசரி பொது மக்களுக்கு குளோரின் கலந்து விநியோகம் செய்ய வேண்டும் என்றும், கொசுக்கள் மூலம் பரவக்கூடிய நோய்களான டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதற்கு, புகை மருந்து அடிப்பதற்கு,ஊராட்சி செயலாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
மாவட்ட சுகாதார அலுவலர் மரு.எஸ்.பொற்செல்வன்,எம்.பி.பி.எஸ், டி.பி.ஹெச், அவர்கள் ஆலோசனையின்படி அனைத்து ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில், போதுமான அளவில்,ப்ளீச்சிங் பவுடர் கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், குடிநீர் நிலைகளில் 1000 லிட்டருக்கு, 4 கிராம் ப்ளீச்சிங் பவுடர் கலந்து பொது மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்றும், 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் தொட்டிகளை சுத்தம் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
மேலும் மழைக்காலத்தில் அனைத்து கிராமங்களிலும், தலா ஒரு கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் கண்டிப்பாக வாங்கி வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வே.முருகேசன், சுகாதார ஆய்வாளர்கள், செந்தில் கருப்பையா, வரதராஜன், செல்வக்குமார், சிவசூர்யா, கனகராஜன், பரங்கிரிநாதன், ராஜகுருநாதன், சிவப்பிரசன்னா, சுரேஷ்குமார் , அனைத்து மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அனைத்து ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.