விசாரணைக்கு அழைத்து செல்ல பட்ட இளைஞர் மரணம் - உயர் நீதி மன்றம் நீதிபதிகள் விசாரணை செய்ய காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !.


விசாரணைக்கு அழைத்து செல்ல பட்ட இளைஞர் மரணம் குறித்து உயர் நீதி மன்றம் நீதிபதிகள் விசாரணை செய்ய வேண்டும் என 
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் டாஸ்மார்க்கில் பணியாற்றி வந்த நிலையில் டாஸ்மார்க் கடை மூடிய பின்னர் சட்ட விரோதமாக மது பானம் விற்பனை செய்வதாக கூறி காவல் துறையினர்  தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று உள்ளனர். திடீரென அருணாச்சலம் மயங்கி விழுந்து விட்டார் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு அரசு மருத்துவனையில் அனுமதிக்க பட்டிருக்கிறது என்று அருணாச்சலம் குடும்பதினருக்கு காவல் துறையினர் தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.

தென்பாகம் காவல் நிலையத்தில் வைத்து நான்கு காவலர்கள் தாக்கியதாக மருத்துவமனையில் படுத்த படியே அருணாச்சலம்  வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார். அதன் பின் அருணாச்சலம் சிகிச்சை பலன்யின்றி மரணம் அடைந்திருக்கிறார். ஆகவே அருணாச்சலத்தின் மரணம் முழுக்க முழுக்க சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. 

மேலும். குற்றம் செய்தவர்களை காவல் துறையினர் கைது செய்து நீதி மன்றங்களில் ஆஜர் படுத்த வேண்டும் அதுதான் காவல் துறையினரின் வேலை ஆனால் அதை விட்டு விட்டு சட்டத்தை தனது கையில் எடுத்து கொண்டு விசாரணை என்ற பெயரில் கொஞ்சம் கூட இவ்வுறக்கமின்றி அடித்து கொள்வதை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது. ஒரு சில காவல்துறையினர் இது போன்ற செயலால் ஒட்டு மொத்த காவல்துறையினருக்கும் கெட்ட பெயரை உண்டாக்கும் என்பதை மற்ற காவல் துறையினரும் இதனை உணர வேண்டும்.

எனவே .இது போன்று காவல் மரணங்கள் தமிழகத்தில் தொடர்ந்த வண்ணமாக உள்ளன. ஆகவே இனி வரும் காலங்களில் இது போன்று காவல் மரணங்கள் தொடராமல் இருக்க தமிழக அரசு உரிய  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அருணாச்சலம் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் உயர் நீதி மன்றம் நீதிபதிகள் நேரடியாக தலைட்டு தூரித விசாரணயை மேற் கொள்ள வேண்டும். என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
Previous Post Next Post