மணப்பாறை வழியாக செல்லும் அனைத்து போருந்துகளையும் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க அனைத்து கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை

மணப்பாறை ஜூலை 27

மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இயங்கும் ஆர்.வி.பி மன்றத்தில் அனைத்துக் கட்சி சார்பி   திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பழனி திண்டுக்கல் கம்பம் தேனி போடி  ஆகிய போருந்துகளை இயக்க வேண்டும்.
மணப்பாறை யில் இருந்து திருச்சிக்கு செல்லும் போது  மத்திய போருந்து நிலையம் செல்லும் அனைத்து பேருந்துகளும் பயணிகளை இறக்கி விட்டு பஞ்சபூர் பேருந்து நிலையம் செல்லும் பஞ்சபூரில் இருந்து மணப்பாறை வழியாக செல்லும் பேருந்துகள் மத்திய பேருந்து நிலையம் வருவது இல்லை 

திருச்சி வந்து மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு அலுவலக பணிகள் முடித்து ஊர் திரும்பும் போது மத்திய பேருந்து நிலையம் வந்தால் நீண்ட நேரம் காத்து இருந்தால் மணப்பாறை டூ திருச்சி இயங்கும் பேருந்துகள் மட்டும்தான் வருகிறது வந்த பேருந்தில் காத்து நின்றவர்களுக்கு இருக்கை என்பது கிடைக்கது நின்று கொண்டுதான் மணப்பாறை வரவேண்டிய நிலை இன்னிலை தவிர்க்க பஞ்சபூர் சென்று வரலாம் என்றாள் பெருளாதர நெருக்கடியில் உள்ள மக்கள் வேறு வழி தெரியது நிற்கும் நிலை இன்னிலையை மற்ற கூடுதல் நேரவிரையத்தை தடுக்க என்ன செய்யலாம் என்னும் ஆலோசனை  கூட்டம் நடைபெற்றது


இக்கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில முன்னாள் நிர்வாக குழு உறுப்பினர் இந்திரஜித் தலைமை வகித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரணகர் மாவட்ட துணை செயலாளர்  பழனிச்சாமி பொருளாளர் ஜனசக்தி உசேன்  நிர்வாக குழு உறுப்பினர் சுப்பிரமணியன்  நகர செயலாளர் தங்கராஜ் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
 
திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர் மு. ஆர் செல்வம்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் மாலா மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தெற்கு ஒன்றிய செயலாளர் துரைராஜ்   காங்கிரஸ் கட்சி  பாண்டியன்  விடுதலை சிறுத்தைகள் தெற்கு மாவட்ட செயலாளர் சக்தி  சி பி ஐ எம் எல் நகர செயலாளர் பாலு மனித உரிமை கழகம் பகுருதீன் சமூக ஆர்வலர் வி பி சங்கர் ரோட்டரி சங்கர் முன்னாள் துணை ஆளுநர் ஹனிபா ஆகியோர் கருத்துறை நிகழ்த்தினார்கள்   அரியலூர் பெரம்பலூர் மார்க்கமாக இயங்கும் பேருந்துகள் சத்திரம் பேருந்து நிறுத்ததில் இருந்து இயங்குவது போல் 
   மணப்பாறை வழியாக செல்லும் பழனி திண்டுக்கல் கம்பம் தேனி போடி  ஆகிய போருந்துகளை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும்  மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது தேவை ஏற்பட்டல் போரட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது
Previous Post Next Post