கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் இயங்கி வரும் கிராம மற்றும் சமூக மேம்பாட்டு மையம் சார்பில் வருடா வருடம் பல பெண்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம் அதுபோல் இந்த ஆண்டும் சுமார் 50பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இன்று அதற்குண்டான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது SWEAD நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வேளாங்கண்ணி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாலாஜி வரவேற்புரையாற்றினார் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எம்.எஸ்.கந்தசாமி சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை வழங்கினார் ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் ராஜசேகர்
பீட்ஸ் தொண்டு நிறுவன நிறுவனர்
கண்ணாயிரம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்ற பெண்களுக்கு வாழ்த்துரை வழங்கினர் இறுதியாக ஈஸ்வரிசந்தானகோபால்
நன்றியுரையாற்றினார்
செய்தியாளர்....
மன்னை மாயா