இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம்!


காயல் பட்டிணம் : ஜீலை 22

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்ட காரர்கள் மீது தடியடி நடத்த பட்டதற்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் நீதிகிடைக்க வேண்டியும் , ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய கோரியும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைதியான வழியில் போராட்டத்தை முன் எடுத்து போராடி வந்தனர். இந்த நிலையில் நடை பெற்று கொண்டியிருந்த போராட்டத்தை களைபதற்க்காக இளைஞர்கள் மீது காவல்துறையினர் காட்டு மிராண்டி தனமாக தடியடி நடத்தியதை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது.

காவல் துறையினர்கள் இளைஞர்கள் மீது தடியடி நடத்தியதில் 100கும்  மேற்ப்டோர்கள் காயம் அடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். என்கிற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது . மேலும் உடலில் காயம் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களுக்கு அனைத்து விதமான மருத்துவ செலவுகளை ஒன்றிய அரசு பொறுப்பு ஏற்க்க வேண்டும்.

ஒன்றிய .மாநில அரசுகளிடம் நியாமான கோரிக்கைகளை முன் நிறுத்தி பொது மக்கள் போராடுவது ஜனநாயக உரிமை. ஜனநாயக ரீதியாக போராடும் இளைளுர்களுக்கு அனுமதியும் உரிய பாதுகாப்பும் வழங்கி நியாமான கோரிக்கைகள் என்னவென்று பார்த்து நிறைவேற்றுவது ஆளும் அரசுகளின் கடமை இதனை செய்யாமல் போராட்ட காரர்கள் மீது காவல் துறையினரை ஏவி விட்டு போராடும் இளைஞர்கள் மீது தடியடி நடத்துவது ஆளும் அரசின் சர்வதாகரத்தின் உச்சம். 

 எனவே : உச்ச நீதி மன்ற நீதிபதிகளின் தலைமையில் உடனடியாக  விசாரனையை கொண்டு   அமைதியான வழியில் போராடிய இளைஞர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட மற்றும் அதற்கு காரணமான அதிகாரிகள் மீது  சட்டப்பூர்வ நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
Previous Post Next Post