குமாரபாளையம் ஜே.கே.கே. சம்பூரணி அம்மாள் கல்லூரியில் போதை ஒழிப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம்250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்

குமாரபாளையம், ஜூலை 21:
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், அன்னை ஜே.கே.கே. சம்பூரணி அம்மாள் மருந்தியியல் கல்லூரியில் போதை ஒழிப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் செந்தில்குமார் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி தாளாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி நவீனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் சட்ட விழிப்புணர்வின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, பேனல் வழக்கறிஞர்கள் துரைசாமி, தீனதயாளன், சட்டத் தன்னார்வலர்கள் வேல்முருகன், விடியல் பிரகாஷ் ஆகியோர் மாணவர்களிடம் போதைப்பொருட்களின் வகைகள், அவற்றால் ஏற்படும் உடல், மன மற்றும் சமூக பாதிப்புகள், போதை தொடர்பான குற்றங்கள் மற்றும் அதற்கான தண்டனைகள் குறித்து விரிவாக விளக்கினர்.
மேலும், போக்ஸோ சட்டம், சாலைப் பாதுகாப்பு விதிகள், அலைபேசி பயன்பாட்டில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள், சைபர் குற்றங்கள் மற்றும் அவற்றிற்கான தண்டனைகள், அரசின் இலவச உதவி எண்கள் உள்ளிட்ட பல்வேறு சட்ட விழிப்புணர்வு தகவல்கள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன. நிகழ்ச்சியின் நிறைவில் விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.
முகாமில் பங்கேற்ற அனைவரும் "போதையை ஒழிப்போம் – போதை இல்லா சமூகத்தை உருவாக்குவோம்" என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி பணியாளர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
Previous Post Next Post