தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் நான்கு அரசு மதுபான கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் சின்னமனூர் கோகுலம் காலனி, மின் நகர் உள்ளிட்ட பகுதிகளின் அருகே அரசு மதுபான கடை (8548) பாரு உடன் செயல்பட்டு வருகிறது.
இந்த கடையை மாற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பால பாரதி அவர்கள் தலைமையில் பூட்டு போடும் போராட்டம் நடைபெற்றது.
இந்த அரசு மதுபான கடை அருகே தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நான்குக்கும் மேற்பட்டது உள்ளது
மேலும் கோகுலம் காலனி, பகுதியிலும் மின் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது.
இந்த அரசு மதுபான கடையில் மது வாங்குபவர்கள் மற்றும் மது குடிப்பவர்கள் அப்பகுதியில் உள்ள இடங்களில் ஆங்காங்கே அமர்ந்து மது குடித்துவிட்டு பாட்டில்களை சாலையில் வீசி செல்கின்றனர். மேலும் பள்ளி மாணவர்கள் அரசு மதுபான கடைக்கு வருவதாகவும் கூறப்படுகிறது, மது போதையில் வாகன ஓட்டிகள் சாலையில் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
இந்த மதுபான கடையினால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதால் மதுபான கடையை இடமாற்ற செய்ய வலியுறுத்தி இன்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இணைந்து மதுபான கடை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கக் கூடிய வகையில் உள்ள இந்த மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணமாக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
தகவல் அறிந்து வந்த ஏராளமான காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் உங்களது கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வழிவகை செய்யப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.
எனவே உடனடியாக இந்த மதுபான கடையை அப்பகுதியில் இருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலபாரதி தெரிவிக்கும் போது அதிகாரிகள் கடையை மாற்ற கால அவகாசம் கேட்டுள்ளதால் அதற்கு ஒத்துழைப்பு தருவோம் என்று கூறினார்.
திடீரென மதுபான கடையில் முன்பு பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது......
பேட்டி - பாலபாரதி