மன்னார்குடி அருகே நிலம் தர மறுத்த விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்து நிலத்தை சூறையாடிய மர்ம நபர்கள் ரூ 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நாவல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன். இவருக்கு சொந்தமாக நாவல் பூண்டி கிராமத்தில் 30 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் 20 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடியும் 10 ஏக்கர் பரப்பளவில் தென்னந்தோப்பு சாகுபடி செய்து வருகிறார் இதில் ரூ 20 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதன் மூலம் சாகுபடி பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார் இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த ஜெயராமன், சிலம்பரசன்,ஸ்டாலின், மூவரும் ராஜேந்திரனை மிரட்டி விளைநிலங்களை எழுதி வாங்க முயற்சித்த்தாகவும் அந்த இடத்தை ராஜேந்திரன் விற்க மறுத்ததாகவும் இந்நிலையில் ராஜேந்திரன் மூவருக்கும் நிலம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ஜெயராமன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 க்கும் மேற்பட்டோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவு ராஜேந்திரனின் தென்னந்தோப்புக்குள் புகுந்து அங்கிருந்த தென்னை மரங்களை வெட்டி சாய்த்து உள்ளனர். அதோடு மட்டுமின்றி அருகில் இருந்த விலை நிலத்திற்குள் புகுந்து நெல் நாற்றுகள் மீது பூச்சி மருந்து தெளித்துள்ளனர். அது மட்டும் இன்றி ராஜேந்திரனுக்கு சொந்தமான இரண்டு ஆழ்துளை கிணறுகளுக்கு மின் இணைப்புகளை துண்டித்து மின் மோட்டார்கள் ஆழ்துளை கிணறுகளை சேதப்படுத்தியது டன் பம்ப் செட்டில் வைக்கப்பட்டிருந்த உர மூட்டைகளையும் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து வடுவூர் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் மூன்று பேரையும் கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்துள்ளனர். இதனால் ராஜேந்திரன் மீது ஆத்திரமடைந்த மூன்று பேரும் ராஜேந்திரனை கொலை செய்து விடுவதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது காவல்துறை தனக்கு பாதுகாப்பளிக்க வேண்டும் ரூ 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதப்படுத்தியவர்கள் மீது காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்களிடமிருந்து உரிய இழப்பீடு பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்
.
Previous Post Next Post