தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வரும் சூழலில் ஏராளமானோர் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்து வருகின்றனர்.
அதன்படி இன்று தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் விழா இன்று தேனி மாவட்டம் கம்பம் கம்பம் மெட்டு சாலை பகுதியில் நடைபெற்றது
இவ்விழாவிற்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா தலைமை வைத்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் 300-க்கும் மேற்பட்டோர் தங்களை இணைத்துக் கொள்ள வந்தவர்களுக்கு கட்சியின் துண்டை அணிவித்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா வரவேற்றார்.
தொடர்ந்து இன்று நடைபெற்ற விழாவில் பேசிய ஜெகநாத் மிஸ்ரா ஊழல் இல்லாத ஒரு உன்னதமான ஆட்சியை தமிழக முதல்வரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் நடத்தி வருகிறார் அதற்கு கரம் போக்கும் வண்ணமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் கம்பம் சட்டமன்ற தொகுதியில் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் எம்எல்ஏ அல்ல நீங்கள் ஒவ்வொருவரும் எம்எல்ஏவாக இருந்து பொதுமக்களுக்காக சேவை செய்திட வேண்டும்
தலைவர் ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சியை பிடித்து போய் பல்வேறு தரப்பினரும் நமது கட்சியில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்
நமது கண்ணுக்குத் தெரிந்த அனைத்து தப்புகளையும் நாம் சுட்டிக் காட்டி ஒரு தூய்மையான ஆட்சியை வழிநடத்த அனைவரும் அரும்பாடு பட வேண்டும் என்று அவர் பேசினார்.
மேலும் ஏழை எளிய மக்களுக்கு ஹாமித் கண்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலத்திட்ட உதவிகளை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா கையினால் வழங்கினார்.
இன்று நடைபெற்ற இந்த இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் கம்பம் பகுதியைச் சார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.......