திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டை கிராமம் உள்ளது. திருமக்கோட்டையிலிருந்து பாலையக்கோட்டை வரை 3கிலோ மீட்டர் தூரம் செல்லும் தார் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயற்ற நிலையில் இருந்தது. ஜனவரி மாதம் சாலை செப்பணிடுவதற்காக தோண்டப்பட்டு பணிகள் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் திருமக்கோட்டை,பாலையக்கோட்டை,புதுக்குடி,பரசபுரம், பாலையூர் நத்தம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்வோர் வங்கி மற்றும் மருத்துவமனைகளுக்கு சென்று வருவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதே பகுதியில் நெஞ்சு வலி ஏற்பட்ட நபர் ஒருவர் சாலை சரி இல்லாததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் இந்நிலையில் உடனடியாக திருமக்கோட்டை முதல் பாளையகோட்டை இடையே சாலையை சீரமைத்து தர வேண்டுமென வலியுறுத்தி திருமக்கோட்டை, பாலையக்கோட்டை, புதுக்குடி, பரசபுரம், பாலையூர், நத்தம் உள்ளிட்ட கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மன்னார்குடி அருகே திருமகோட்டையில் 7 மாதங்கள் ஆகியும் சாலையை சீரமைக்காததால் உடனடியாக சாலை பணிகளை செப்பனிட வலியுறுத்தி 6 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் சாலை மறியல் . சாலைமறியலால் எளவனுர் மன்னார்குடி சாலை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
தமிழர் களம் மாத இதழ்
0