தேனி மாவட்டம் கம்பம் அருகே மரம் விழுந்து மாடு மேய்க்கும் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி - காவல்துறையினர் விசாரணை.!


தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் சிவனாண்டித்தேவர். இவருடைய மகன் இரட்டை இலை செல்வம் (47). இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர், தனது ஊருக்கு அருகில் உள்ள கருநாக்கமுத்தன்பட்டியில் தினமும் மாடுகளை மேய்ப்பது வழக்கம். அந்த வகையில், இன்றும் அவர் மாடு மேய்ப்பதற்காகச் சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக, அவர் நின்றுகொண்டிருந்த இடத்தின் அருகே இருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து அவர் மீது விழுந்தது. இதில், தொழிலாளி இரட்டை இலை செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்துத் தகவல் அறிந்து வந்த ராயப்பன்பட்டி காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காகக் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாடு மேய்க்கும் தொழிலாளி மரம் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post