திருமலைராஜன் ஆறு சிட்டி யூனியன் வங்கி நிதி உதவியுடன் தூர்வாரும் பணி துவக்கம்,வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு உடனடி அனுமதி வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி.பி ஆர் பாண்டியன்



பாபநாசம் அருகே திருமலை ராஜன் ஆறு சிட்டி யூனியன் வங்கி சமூக மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 50 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிதுவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிட்டி யூனியன் வங்கி துணை பொது மேலாளர் வெங்கடேஸ்வரன்முன்னிலையில் 
பிஆர் பாண்டியன் பணியை துவக்கி வைத்த பின்
செய்தியாளர்
களிடம் தெரிவித்ததாவது:

காவிரி டெல்டாவில் விவசாயிகள் குடும்பங்களால்  துவக்கப்பட்ட சிட்டி யூனியன் வங்கி துவக்கப்பட்டது. இன்று உலகளாவிய அளவில் பெருமை பெற்று காவிரி டெல்டாவிற்கே பெருமை சேர்த்துள்ளது. லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது.

நடந்தாய்வழி காவிரி திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு உடனடி நிதி உதவிகளை வழங்க வேண்டும்.
ஆசிய வளர்ச்சி வங்கி இரண்டாவது கட்ட நிதியை பெற்றுகாவிரி டெல்டா கடல் முக துவார நதிகள் சீரமைப்பு திட்டத்தை செயல்படுத்துவதை தமிழக அரசு கைவிட்டு உள்ளதாக வந்திருக்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. முதலமைச்சர் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியை பெற்று நதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.

சிட்டி யூனியன் வங்கி விவசாயிகள் நலனை முன்னிறுத்தி பத்தாண்டுகளாக தனது சமூக மேம்பாட்டு நிதியில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவிலான 12க்கும் மேற்பட்ட ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது.200 கிலோமீட்டர் ஆறுகள்,பாசன வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டுள்ளது 300 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு
நீர் சேமிக்கும் பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளது

ஏரியின் கரைகள் அகலப்படுத்தி உயரப்படுத்தி மரங்கள் வளர்க்கப்பட்டு சோலை வனமாக காட்சியளிக்கிறது.
பணை மரங்கள் நடப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர் மேம்பட்டுள்ளது ஆழ்குழாய் கிணறுகள் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நீங்கியது. சிட்டியூனியன் வங்கி திட்டத்தை பார்த்து அரசாங்கமே குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தியது பெருமையாக உள்ளது

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களை நேற்று (21.05 2026) சென்னை கோட்டையில் சந்தித்து விவசாயிகள் வண்டல் மண் எடுத்து பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரினோம். நேற்று இரவே அதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டிருக்கிறது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். விரைந்து நாங்கள் அளித்த 25கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்றுவார் என்கிற நம்பிக்கையோடு சந்திப்பு அமைந்தது என்றார்.

நிகழ்ச்சியில்தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் நிழல்தாசன் உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனர்

இதனை தங்கள் ஊடகம் பத்திரிகையில் வெளியிட்டு உதவிட வேண்டுகிறேன். இவன் 
என் மணிமாறன் செய்தி தொடர்பாளர் பிர
Previous Post Next Post