2026-2027 ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கவுள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ‘கட்டணக் கொள்ளை’ புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. தமிழக அரசு மற்றும் கட்டண நிர்ணயக் குழுவின் உத்தரவுகளைக் காற்றில் பறக்கவிட்டு, 'கட்டிடத் தொகை', 'வளர்ச்சி நிதி' என்ற பெயர்களில் பெற்றோர்களைப் பள்ளி நிர்வாகங்கள் கறந்து வருவது தற்பொழுது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள நிலவரம்: அரசு வரம்புமீறி பள்ளிகளின் வசூல் வேட்டை
அரக்கோணம், ஆற்காடு, வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை மற்றும் சிப்காட் தொழில்நகரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நமது நிருபர் குழு நடத்திய கள ஆய்வில் அம்பலமான உண்மைகள்:
1. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் (Aided Schools): இலவசக் கல்வியில் ‘விதி மீறல்கள்
சட்ட விதி: 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி முற்றிலும் இலவசம். உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள் ஊதியத்தை அரசே வழங்குவதால், கட்டிடத் தொகையோ, இதர பெரும் தொகைகளோ வசூலிக்க அரசு தடை விதித்துள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழக (PTA) சிறப்புத் தொகையாக ஆண்டுக்கு ₹500 முதல் ₹1,000 மட்டுமே பெற அனுமதியுண்டு.
அத்துமீறல்: மாவட்டத்தில் உள்ள சில பாரம்பரிய நிதியுதவி பெறும் பள்ளிகளில், "பள்ளி கட்டிட நிதியுதவி", "ஆங்கில வழிக் கல்விக்கான சிறப்புக் கட்டணம்" என்ற பெயர்களில் ஏழை மற்றும் நடுத்தரப் பெற்றோர்களிடம் 15,000 முதல் 30,000 வரை கட்டாய நன்கொடை வசூலிக்கப்படுகிறது. பணம் தராவிட்டால் சேர்க்கை மறுக்கப்படுவதாகப் பெற்றோர்கள் கண்ணீர் மல்கக் கூறுகின்றனர்.
2. மெட்ரிகுலேஷன் & சி.பி.எஸ்.இ பள்ளிகள்: 'ஸ்மார்ட்' முறையில் நடக்கும் பகல் கொள்ளை!
சட்ட விதி: கட்டண நிர்ணயக் குழுவின் வழிகாட்டுதலின்படி, பள்ளியின் தரத்தைப் பொறுத்து ஆண்டுக்கு தோராயமாக ₹15,000 முதல் ₹60,000 வரை மட்டுமே (சர்வதேசப் பள்ளிகள் தவிர) கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
அத்துமீறல்: ஆனால், ராணிப்பேட்டையின் முன்னணிப் பள்ளிகளில் ஏசி வகுப்பறை, ஸ்மார்ட் கிளாஸ், விளையாட்டுப் பயிற்சி, சீருடை மற்றும் புத்தகங்கள் என்ற பெயரில் கூடுதல் கட்டணமாக ₹20,000 முதல் ₹50,000 வரை கூடுதலாகப் பிடுங்கப்படுகிறது.
பல பள்ளிகளில் ஒட்டுமொத்த ஆண்டு கட்டணம் ₹1 லட்சத்தைத் தாண்டுகிறது.
சட்டப் பிரிவு 7: நோட்டீஸ் போர்டில் கட்டணப் பட்டியல் ஏன் இல்லை?
சட்டம் சொல்வது என்ன?
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (கட்டண வசூல் ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டத்தின்படி, ஒவ்வொரு சுயநிதி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளியும் தங்களுக்குக் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்துள்ள அதிகாரப்பூர்வ கட்டண ஆணையை (Fee Order Copy), பெற்றோர்கள் தெளிவாகப் பார்க்கும் வகையில் பள்ளியின் நுழைவாயில் அல்லது அலுவலக அறிவிப்புப் பலகையில் (Notice Board) கட்டாயம் ஒட்ட வேண்டும்.
மறைக்கப்படும் உண்மைகள்:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் இந்த வழிகாட்டுதல் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. கட்டணப் பட்டியலை ஒட்டினால் தங்களின் கூடுதல் வசூல் அம்பலமாகிவிடும் என்பதால், அதனைத் திட்டமிட்டே மறைத்து, பெற்றோர்களை ரசீது இல்லாத "கட்டிடத் தொகை" கட்ட வற்புறுத்துகின்றனர்.
விதிமீறும் பள்ளிகள் மீது பாயும் சட்டம்!
அரசு நிர்ணயித்த தொகையை விடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது சட்டம் மற்றும் கல்வித் துறை ரீதியாகப்
சட்டப்பிரிவுகளின்படி, முறைகேடாகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகத்திற்கு 1 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை அபராதம் விதிகப்பட வேண்டும் தவறு தொடர்ந்தால், பள்ளி நிர்வாகிகளுக்கு 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கச் சட்டத்தில் இடமுண்டு.
(Cancellation of NOC): விதிமுறைகளைத் தொடர்ந்து மீறும் மெட்ரிகுலேஷன் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகளின் அங்கீகாரத்தை அல்லது தடையின்மைச் சான்றிதழை ரத்து செய்யப் பள்ளிக்கல்வித்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது.
கூடுதல் கட்டணம்
வசூலிக்கும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் பராமரிப்பு மானியங்கள் உடனடியாக நிறுத்தப்படுவதோடு, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
பெற்றோர்களிடம் முறைகேடாகப் பெற்ற கூடுதல் தொகையை, வட்டியுடன் சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்கே முழுமையாகத் திருப்பித் தரக் குழு உத்தரவிடும்.
ராணிப்பேட்டை மாவட்டப் பள்ளிகளில் இது போன்ற அத்துமீறல்களை ஆய்வு செய்து (CEO)
கட்டண நிர்ணயக் குழு (Fee Committee) DPI
தமிழக முதல்வர்
கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
"கல்வி என்பது வியாபாரமல்ல, அது சமூகத்திற்கான சேவை. அதனை லாபம் ஈட்டும் சந்தையாக மாற்றுவதைச் சகித்துக் கொள்ள முடியாது. ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகமும், பள்ளிக்கல்வித்துறையும் உடனடியாகப் பறக்கும் படைகளை அமைத்து, மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அதிரடிச் சோதனை நடத்த வேண்டும். அப்போதுதான் இந்தக் 'கட்டணக் கொள்ளை'க்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்." என்பதே ஒட்டுமொத்தப் பெற்றோர்களின் கோரிக்கையாகும்.