மன்னார்குடியில் 10-ம் வகுப்பு பொது தேர்வில் தினக்கூலி தொழிலாளி மகள் மாவட்ட அளவில் முதலிடம் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு .



பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியான நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே எட அன்னவாசல் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் தின கூலியாக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி   சுதா  ஆகியோரின் மகள் தரணி காரிக்கோட்டை பகுதியில் உள்ள  விவேகனந்தா வித்யாலய பள்ளியில்  10 ம் வகுப்பு தேர்வில் 500 / 496 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடமும் மாவட்டத்தில் முதல் இடத்தையும் பிடித்துள்ளர் . தேர்வில்  மாநில அளவில் சிறப்பிடம் பெற்று சிறப்பான சாதனை படைத்துள்ள தரணிக்கு  பள்ளியின்  தாளாளர் , ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நேரில்  சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் . பின்னர் ஆசிரியர் பள்ளி 2025 - 26 ஆம் கல்வியாண்டில் முதன்முறையாக பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுதினார்கள். எங்கள் மாணவர்கள்... அனைத்து மாணவர்களுமே 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளார்கள். அதில் குறிப்பாக எஸ். தரணி என்ற மாணவி எல்கேஜியிலிருந்து (LKG) பத்தாம் வகுப்பு வரை எங்களது பள்ளியிலேயே படித்துக் கொண்டிருந்தார். 500-க்கு 496 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் சாதனையும் படைத்துள்ளார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார் .


Previous Post Next Post