திண்டிவனம் அருகே ரயில் பாதையை சரிசெய்யும் நவீன இயந்திரங்கள் பொருந்திய ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதால் புதுவையில் இருந்து புதுடெல்லி மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேஜஸ் ரயில் தாமதம்.


திண்டிவனம், 
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் மயிலம் பகுதியில் உள்ள இருப்பு பாதைகளில் ரயில்வே இருப்புப் பாதைகள் சரி செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், இதற்கான பணிகளில் ஈடுபடுத்துவதற்காக அனைத்து உபகரங்களுடன் கூடிய ரயில் பாதை சரி செய்யும் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல் இந்த ரயில் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ரயில்வே நிலையம் அருகே ஓடுபாதையை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக ரயில் என்ஜின் தடம் புரண்டு நின்றது. நின்றது இதனால் புதுவையில் இருந்து புதுடெல்லியை நோக்கி வழக்கமாகச் செல்லும் புவனேஸ்வர் அதிவிரைவு ரயில் மற்றும் மதுரை சென்னை தேஜஸ் ரயில் உள்ளிட்டவை விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது இந்த புவனேஸ்வர் ரயிலானது விபத்தில் சிக்கியுள்ள ரயில் என்ஜின் ரயில்வே இருப்புப் பாதையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகு தான் செல்லும் என துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இந்த நிலையில், புது டெல்லிக்கு வழக்கமாக திண்டிவனம் ரயில்வே நிலையம் வழியாக செல்லும் புவனேஸ்வர் ரயில் மற்றும் மதுரை தேஜஸ் ரயில்கள் 3ல் இருந்து 4 மணிநேரம் கால தாமதமாக செல்லும் என கூறப்படுகிறது.இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே பாதுகாப்பு துறை போலீசார் மற்றும் பொறியியல் துறை அதிகாரிகள் விரைந்து சரி செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post