வடபாதிமங்கலம் அருகே திமுகவின் ஐந்து ஆண்டு சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு திண்ணை பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.



தமிழக முழுவதும்  வெல்லும் தமிழ் பெண்கள் படை வீடு 10 பேர் கொண்ட குழுவினர்   வீடு வீடாகச் சென்று  திமுகவின் ஐந்தாண்டு சாதனைகள் குறித்து  பொதுமக்களிடம்   விழிப்புணர்வு  பிரச்சாரத்தை மேற்கொண்டு  வருகின்றனர் அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடபாதிமங்கலம் அரிச்சந்திர புரம் கிராமத்தில் வெல்லும் தமிழ் பெண்கள் படை வீடு பத்து பேர் கொண்ட குழுவினர் திமுக  அரசின் சாதனை விளக்க கையேடுகளை வழங்கி  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள்  நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் இல்லம்  தேடி மருத்துவ முகாம் ,  தமிழக முதலமைச்சரின்  காலை உணவு திட்டம் , மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், கல்லூரி மாணவிகள் பயன்பெறும் புதுமைப்பெண் திட்டம் மாணவர்கள் பயன்பெறும் தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து வீடு வீடாக சென்று ஐந்து ஆண்டு சாதனைகள் குறித்து  பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் 
Previous Post Next Post