தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் செய்தி குறிப்பு. தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் போராட்டக் குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் போராளிகள், அருள் உட்பட அனைவர் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளின் திரும்பப் பெற்று நிபந்தனின்றி விடுதலை செய்திட வேண்டும் ,
மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்திட வேண்டும், பொய் வழக்கு போட்டு கார்ப்பரேட்டர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் மாண்புமிகு அமைச்சர் ஏ .வா .வேலு ,திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ,காவல் கண்காணிப்பாளர் அனைவரையும் பணிநீக்கம் செய்திட வேண்டும், குண்டர் தடுப்பு சட்டத்தை திரும்ப பெற விவசாயிகளின் குடும்பங்களிடம் இருந்து பெறப்பட்ட நிபந்தனை கடிதங்களை திரும்ப கொடுத்திட வேண்டும், மாவட்ட விட்டு மாவட்டம் சென்று விவசாயிகளுக் குரல் கொடுக்கும் போராளிகளுக்கு தடை விதிக்கும் அமைச்சர் ஏ வா வேலுஅவர்களைவன்மையாக கண்டிக்கிறோம், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 கைவிட வேண்டி கோரிக்கைகள், தமிழகத்தில் உள்ளது உள்ள கோரிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தீர்த்து வைக்க வேண்டி மாவட்ட ஆட்சியர் அவர்களை பரிந்துரை செய்ய வேண்டி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் போராட்டக் குழு சார்பில் இன்று சேலம் மாவட்டம் ண கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம்மாநில தலைவர் கொண்டலாம்பட்டி திரு .எம்.தங்கராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது உடன் மாநில பொதுச் செயலாளர் செல்லமுத்து, மாவட்ட தலைவர் ரமேஷ், கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன், மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் , வீரபாண்டி ஒன்றிய தலைவர் தங்கவேல்,தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுமாவட்ட தலைவர் தங்கவேல், உழவர் சந்தை விவசாயிகள் ,தமிழக ஐக்கிய விவசாயிகள் சங்கம் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்