உசிலம்பட்டி அருகே சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.,


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.மீனாட்சிபுரம் கிராமத்தில் சுமார் 300 க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.,

இந்த கிராமத்திற்கு திருமாணிக்கம் மற்றும் தாடையம்பட்டி பகுதியிலிருந்து வரும் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதாகவும், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திப்பதோடு, 108 ஆம்புலென்ஸ் கூட வந்து செல்ல முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.,
மேலும் குடிநீர், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கைகளும் இல்லை என குற்றம் சாட்டி.,

இன்று சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு டி.மீனாட்சிபுரம் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது., பேரையூர் காவல் ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டாத சூழலால் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக உசிலம்பட்டி பேரையூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.,

தகவலறிந்து மாவட்ட ஆட்சியர் நிகழ்வில் இருந்த ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கண்ணன் விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சாலை மற்றும் பாலம் அமைக்க சுமார் 8 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும், விரைவில் அரசு ஒப்புதல் அளித்தவுடன் சாலை மற்றும் பாலம் அமைக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சாலை மறியல் கைவிடப்பட்டது.,
Previous Post Next Post