மதுரை அக்டோபர் 18: ஒத்தக்கடையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு நேற்று போலீசார் பூட்டு போட்டு அபராதம் வசூலித்தனர்

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திய வாகனங்களுக்கு பூட்டு

மதுரை அக்டோபர் 18: ஒத்தக்கடையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு நேற்று போலீசார் பூட்டு போட்டு அபராதம் வசூலித்தனர்.    ஒத்தக்கடையில் நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்களாலும், புறநகர் பகுதியில் வாகனங்கள் நிறுத்த தனியாக இடம் இல்லாத காரணத்தாலும் பெரும்பாலான வாகனங்கள் சாலை ஓரத்திலேயே நிறுத்தப்படுகின்றன. இதனால் ஒத்தக்கடையில் அருகில் உள்ள பேருந்து நிலையம், நரசிங்கம் ரோடு, திருமோகூர் ரோடு, மேலூர் மெயின் ரோடு, மாட்டுத்தாவணி ரோடு உள்ளிட்ட சாலைகளில் பொதுமக்கள் நெரிசல் ஏற்பட்டு வருவது வழக்கிமாகி வருகிறது. இதனால் 
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போதுமான போலீசார் இல்லாததால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர். இந்நிலையில, மதுரை மாவட்டத்தில் தீபாவளி சீசனையொட்டி ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வருவதால் வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதுரை புறநகரில் இருந்து மாட்டுத்தாவணி செல்லும் சாலைகள் முழுவதும் பராமரிப்பு காரணமாக ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுவதால் வாகனங்கள் அனைத்தும் நெரிசல் ஏற்பட்டு சிரமபட்டும் இதன் வழியாக செல்கின்றனர். மேலும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் ரோந்து வாகனம் மூலம் சென்று போக்குவரத்தை சீர் செய்து வருவதுடன் விதிமுறைகளை மீறி போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர்.  

இதன் ஒரு பகுதியாக நரசிங்கம் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு பூட்டு போட்டு அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இதுகுறித்து ஒத்தக்கடை காவல் நிலையம் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் கணேசன் கூறுகையில், ‘தற்போது தீபாவளி சீசனாக உள்ளதால் ஒத்தக்கடையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. எனவே வாகன ஓட்டிகள் முறையாக போக்குவரத்துக்கு இடையூறில்லாத வகையில் வாகனங்களை நிறுத்த வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களின் சக்கரத்திற்கு பூட்டு போட்டு அதன் உரிமையாளர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது’, என்றார்.


ஒத்தக்கடை மதுரை மலர் செய்தியாளர்

பாண்டியன்
99444-44865
Previous Post Next Post