ராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற சிறுமி வன்கொடுமை வழக்கில், உண்மைக் குற்றவாளியைத் தப்பிக்க வைத்துவிட்டு, அந்த அநீதியை அம்பலப்படுத்திய செய்தியாளர் மீது பொய் வழக்குப் புனையக் காவல்துறையின் ஒரு குறிப்பிட்ட குழு கூட்டுச் சதியில் ஈடுபட்டு வருவதாக நமது சிறப்புப் புலனாய்வுக் குழுவின் கள விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன
.
வாழைப்பந்தல் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில், சிறுமியின் நெருங்கிய உறவினர்கள் சுரேஷ் மற்றும் சித்தப்பா பாலாஜி ஆகிய இருவர் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. ஆனால், ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், இதில் தொடர்புடைய ஒருவரை மட்டும் கைது செய்துவிட்டு, முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் சாமியார் பாலாஜியிடம் பெருந்தொகை பெற்றுக்கொண்டு அவரை வழக்கிலிருந்து விடுவித்ததாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காவல்துறையின் இந்த ஒருதலைப்பட்சமான போக்கை ஆற்காடு செய்தியாளர் பாஸ்கரன் செய்தியாக வெளியிட்டதைத் தொடர்ந்து, உயர் அதிகாரிகளின் நெருக்கடிக்கு ஆளான சம்பந்தப்பட்ட காவல்துறையினர், பாஸ்கரன் மீது சிறுமியின் அடையாளத்தை வெளியிட்டதாகக் கூறி வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதோடு நிற்காமல், வேறு ஒரு நிலப் பிரச்சனைக்காக அப்பகுதிக்குச் சென்ற மூன்று செய்தியாளர்களை இந்த வழக்கில் சிக்க வைக்கத் அவர்களின் சாதிகளை கேட்டு வருவாய்த் துறையினரை அலட்டி தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது
பத்திரிகையாளர்கள் மீது பொய் வழக்கை புனைய யார் யாருக்கு என்ன பங்கு? – சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அதிர்ச்சி அறிக்கை:
ஆய்வாளர் லதா & உதவி ஆய்வாளர் தேவி (அனைத்து மகளிர் காவல் நிலையம்) –
வருவாய்த்துறையினருக்கு மிரட்டல், நெருக்கடி
செய்தியாளர்கள் மீது எப்படியாவது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத பொய் வழக்கைப் போட வேண்டும் என்ற நோக்கில், ஆய்வாளர் லதாவும், உதவி ஆய்வாளர் தேவியும் வட்டாட்சியர் (தாசில்தார்), வருவாய் ஆய்வாளர் (RI) மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களை (VAO) நேரில் சந்தித்தும், தொலைபேசி மூலமாகவும் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாகத் தெரியவந்துள்ளது.
வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று செய்தியாளர்களின் சாதி விவரங்களைக் கேட்டு தாசில்தாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இவர்கள், அலுவலகத்தை விட்டு வெளியே வரும்போது, "இந்த வட்டாட்சியர் சாதி விவரத்தைச் சொல்ல மாட்டாரு போல... அக்யூஸ்டுகளை உள்ளே அமர வைத்து தாசில்தார் பேசி இருக்கிறான் பறை பசங்களுக்கு பத்திரிகை ஒரு கேடா?" எனக் கடுமையான சாதி வன்மத்தோடும், சாதியை இழிவுபடுத்தும் வகையிலும் பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசியுள்ளனர்.
இவர்கள் பேசியதை அங்கிருந்த மூன்று நபர்கள் நேரில் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது
உண்மையை வெளியே கொண்டு வந்து போலீசாரின் முகத்திரையை கிழிக்கும் பத்திரிக்கையாளர்கள் அக்யூஸ்டிகள் என்றால் கஞ்சா, குட்கா, மதுபான விற்பனை, மணல் கடத்தல்,
கட்டப்பஞ்சாயத்து போன்ற தொழில் செய்பவர்களுடன் அங்காளி,பங்காளியா இருந்து கொள்ளலாம் சம்பாதித்து வரும் உன்னை எந்த குற்றவாளி வரிசையில் சேர்ப்பது காக்கிச்சட்டை போர்வையில் இருப்பதால் நீங்கள் என்ன நியாயாதிபதியா? பல அக்யூஸ்டிகளின் பன்முகத்தன்மை கொண்ட அடையாளம் நீங்கள் மறந்துவிடக்கூடாது விரைவில் தங்களின் உண்மை முகத்திரை வெளிச்சத்திற்கு வரும் என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்
வாகன ஓட்டுநர் செல்வத்தின் 'புரோக்கர்' ராஜ்ஜியம்:
ஆய்வாளர் லதாவின் வாகன ஓட்டுநராகப் பணியாற்றியவர் செல்வம், லதா மற்றும் தேவி ஆகியோருக்குப் பணம் வசூலித்துத் தரும் முக்கிய இடைத்தரகராகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இவர் தற்போது ஏஆர் போலீஸ்சாக வேலை பார்த்து வருகிறார் இப்படியிருக்க குறிப்பாக, வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் சென்று, தன்னை ஒரு பெரிய அதிகாரி போலக் காட்டிக்கொண்டு ஆய்வாளர் லதா என்னை அனுப்பியுள்ளார் பத்திரிக்கையாளர்களின் சாதி சான்று கொடுக்கச் சொன்னாராமே! என்ன? ஆச்சு மிரட்டும் தொனியில் பேசி, வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
ஆய்வாளர் லதாவின் திமிரி - மோசூர் கூட்டணியும், குடும்பங்களைப் பிரிக்கும் வேலையும்:
கலவை, திமிரி பகுதியில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய காலத்திலிருந்தே, ' முருகனைக் குறிக்கும் பொது பெயர்கள் கொண்ட ஒரு நிருபர் மற்றும் ஒரு சமூக ஆர்வலருடன் இணைந்து சாதி ரீதியான கூட்டணி அமைத்து, கலவை மற்றும் திமிரி, மோசூர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து மற்றும் மணல் கடத்தல் வசூல் வேட்டை நடத்துவதாகக் கூறப்படுகிறது. லதாவிற்கு பணம் மட்டும் தான் குறிக்கோளாம். பணம் கொடுத்தால் எந்த வேலையும் செய்யத் துணிவார் என்கிறார்கள்
மேலும், மகளிர் காவல் நிலையத்திற்குத் தீர்வு தேடி வரும் தம்பதியினரைச் சேர்த்து வைக்காமல், பணம் பறிப்பதோடு, "கணவனை விவாகரத்து செய்துவிட்டுத் தனியாக ஜாலியாக இரு" எனப் பெண்களைத் தவறாக வழிநடத்தி குடும்பங்களைப் பிரிப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
எஸ்.எஸ்.ஐ. பாஸ்கரன் (ராணிப்பேட்டை நகர காவல் நிலையம்):
கடந்த 15 ஆண்டுகளாகப் பணியிட மாறுதல் உத்தரவுகளைக்கூட மதிக்காமல், உயர் அதிகாரிகளின் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரே இடத்தில் கோலோச்சி வருவதாக இவர் மீது புகார் உள்ளது. அம்மூர் வாலாஜா ராணிப்பேட்டை சிப்காட் போன்ற பகுதிகளில் மணல்,மண் கடத்தல் மற்றும் கஞ்சா கும்பல்களுக்கு இடைத்தரகராகச்
செயல்பட்டு அதிகாரிகளுக்கு பணம் வாங்கித் தருவதையே வழக்கமாகக் கொண்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் காவல் வட்டாரத்தில் கூறப்படுகிறது
இப்படி இருக்க ஏற்கனவே தன்னைப் பற்றிச் செய்தி வெளியிட்டது இந்தச் செய்தியாளர்கள் குழுதான் என்ற முன்விரோதத்திலும், ஆய்வாளர் லதாவும் இவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், செய்தியாளர்கள் மீது பொய் வழக்குப் பதியக் காய்களை நகர்த்தி தீவிரம் காட்டி வருகிறார்.
மேலும், இவரது தனிப்பட்ட நடைமுறை வாழ்க்கையிலும் பல்வேறு ஒழுக்கக் கேடான தொடர்புகள் இருப்பதாகவும், அவற்றை மறைக்கவே அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகவும் காவல்துறை வட்டாரங்களே கிசுகிசுக்கின்றன.
இந்த தவறான தொடர்புகள் எங்கெங்கு உள்ளது என்பதையும் அம்பலப்படுத்த முடியும்
எஸ்.பி. ஏடு வினோத் குமார் (சிப்காட் காவல் நிலையம்):
இவரின் பூர்வீகம் இலங்கைத் தமிழர் தற்போது காரை பர்மா காலனியில் வசித்து வருகிறார்
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பகுதியில் ராணிப்பேட்டை நகர காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் இவர், சட்டவிரோத விற்பனையாளர்களிடம் மாமூல் வசூலித்து உயர் அதிகாரிகளுக்குப் பங்கிட்டுத் தருவதில் முக்கியப் பங்காற்றுவதாகக் கூறப்படுகிறது அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு அவர்கள் சொல்லும் வேலைகளை எல்லாம் தட்டாமல் செய்து அதிகார துஷ்பிரயோகம் செய்து சம்பாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது
தற்போது இவர் அருகே உள்ள சிப்காட் காவல் நிலையத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் அது தொழிற்பேட்டை நிறைந்த பகுதி என்பதால் ஒரு மாதத்திற்கு மட்டும் இவர் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வசூல் செய்வதாக கூறப்படுகிறது தனது சட்டவிரோதச் செயல்களுக்கு இடையூறாக இருக்கும் இந்த நான்கு செய்தியாளர்களையும் சிறையில் தள்ள வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.
எஸ்.பி. இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி (மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்):
இவர் ஏற்கனவே நெமிலி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்திருக்கிறார் இவர் அங்கு பணியாற்றிய காலத்தில் கட்டப்பஞ்சாயத்து மாமுல் வசூலித்து பல லட்சங்கள் சம்பாதித்ததாக காவல் வட்டாரத்தில் கூறப்படுகிறது
தற்போது இவர் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார் தனக்கு வேண்டிய ஆய்வாளர்களைக் காப்பாற்றவும், கட்டப்பஞ்சாயத்து விவகாரங்களைச் சரிக்கட்டவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) மற்றும் ஏ.டி.எஸ்.பி. ஆகியோரிடம் பொய்யான தகவல்களைத் தெரிவித்துத் திசைதிருப்பியதாகக் கூறப்படுகிறது.
மேலும் இவர் தனக்கு ஆதரவாளர்கள் செய்யும் வசூலில் பெரும் பங்கு வந்து சேர்வதாகவும் கூறப்படுகிறது நேர்மையான அதிகாரிகளைத் தவறாக வழிநடத்தி, செய்தியாளர்கள் மீது வழக்குப் பதிய அனுமதி பெற்றதில் இவருக்கு முக்கியப் பங்கு உள்ளதாகத் தெரிகிறது.
உளவுத்துறை விசாரணை அவசியம்:
சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளே, தங்களின் தவறுகளை மறைக்க அதிகார துஷ்பிரயோகம் செய்து, சாதி வன்மத்தோடு வருவாய்த்துறையினரையும் மிரட்டி, ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகையாளர்களை நசுக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கடந்த பல ஆண்டுகளாக ஒரே மாவட்டத்தில் வேரூன்றி, சட்டவிரோதச் செயல்களுக்குத் துணைபோகும் இந்த அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் கும்பல் மீது மாநில உளவுத்துறையும், காவல்துறை உயர் அதிகாரிகளும் உடனடியாக ரகசிய விசாரணை நடத்தி, இவர்களை வெளிமாவட்டங்களுக்குப் பணியிட மாற்றம் செய்வதோடு, துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் நடுநிலையான பத்திரிகையாளர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.