தேசிய விவசாயிகள் தினம் 2022 .நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட அக்கியம்பட்டி கிராமத்தில் பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய விவசாயிகள் தின விழாவை கொண்டாடினர்.இவ்விழாவின் தொடக்கமாக விவசாயிகளைப் பெருமிக்கும் வகையில் தேசிய விவசாயத் தினத்தை முன்னிட்டு கவிதைக்கூறி இவ்விழாவினைத்தொடங்கினர். அதனைத் தொடந்து மரவள்ளிக்கிழங்கு(குச்சிக் கிழங்கு).இதில் வரும் மாவுப்பூச்சினைக் கட்டுப்படுத்தும் செயல் முறையைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மேலும், பருத்தியில் வரும் இளஞ் சிவப்புக் காய்ப்புழு மற்றும் கரைப் பூச்சியைக் கட்டுப்படுத்தும் முறையைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. செயற்கை மற்றும் இயற்கை முறையில் பயிர் மேலாண்மை செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர். மேலும் , தென்னையில் குறும்பை உதிர்தலைக் கட்டுப்படுத்துவதர்க்காக TNAU தென்னை டானிக் வேர்க்கட்டுதல் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.விவசாயிகளும் இந்நிகழ்ச்சியில் ஆர்வமாக கலந்து கொண்டனர் .இவ் விழாவில் சேந்தமங்கலம் தொகுதி உதவி வேளண்மை அலுவலர் திரு.ஜெகதீசன் மற்றும் பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரியின் கிராமப்புற விவசாய பணி அனுபவ ஒருங்கிணைப்பாளர் டாக்டர். இலக்கியா,திரு.பூவரசன் மற்றும் பேராசிரியர்.திருமதி.மௌனிகா கலந்துக் கொண்டனர். "விவசாயம் பழகு !
விவசாயி காப்போம்..
விவசாயத்தை காப்போம்..."