ஜான்வி அவர்களுக்கு வைர மங்கை விருது, சிங்க பெண் விருது, வீரமங்கை மங்கை விருது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விருது, இளம் படைப்பாளிகள் விருது வழங்கி கௌரவித்தது.

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சிவா - நித்யா தம்பதியினரின் மகள் ஜான்வி.பிறந்த இடம்.ஆதம்பாக்கம், சென்னை.(23-5-2019).
இவருடைய அண்ணன் அனிஷ் (10 வயது).
3 வயதில் 8 உலக சாதனைகள் படைத்தவர்.
முதல் சாதனையானது தாய்மொழியான தமிழ்மொழிக்கு பெருமைப் சேர்க்கும் வகையில் தமிழ் உயிர் எழுத்துக்களை ஒன்பது வினாடிகளில் கூறி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.


ஒரு நிமிடத்தில் 8 யோகாசனங்களை நிகழ்த்தி ஜீனியஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம் பிடித்துள்ளார்.
தமிழ் உயிர் எழுத்துக்கள், யோகா (6 ஆசனங்கள்), காய்கறிகள், பழங்கள், நிறங்கள்,ஆங்கில எழுத்துக்கள், மழலையர் பாடல்கள் அனைத்தும் மிகக்குறைந்த வினாடிகளில் கூறி புதிய உலக சாதனை நிகழ்த்தி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம் பிடித்துள்ளார்.
இவருடைய சாதனைகளை அங்கீகரித்து சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
அஞ்சல் தலை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.(இந்திய அஞ்சல் துறை).
சிறுவயதிலேயே சமூக சேவையில் ஈடுபாடு கொண்டவர்.இவர் 2 வயதிலேயே தான் படிக்கும் பள்ளியில் மரங்களை நட்டு வைத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.இதற்காக ஒடிசா அரசு சான்றிதழ் வழங்கி கௌரவித்தது.பல்வேறு அறக்கட்டளைகள் மற்றும் அமைப்புகள் இணைந்து சாதனை சிறுமி ஜான்வி அவர்களுக்கு வைர மங்கை விருது, சிங்க பெண் விருது, வீரமங்கை மங்கை விருது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விருது, இளம் படைப்பாளிகள் விருது வழங்கி கௌரவித்தது.
உணவு வழங்குதல் மரம் நடுதல் நெகிழி விழிப்புணர்வு செய்தல் ஆகியவற்றிற்காக சிறந்த சமூக சேவைக்கான விருது 6 பெற்றுள்ளார்.
இலங்கை அரசாங்கம் ஜான்வி அவர்களுக்கு கௌரவ சான்றிதழ் வழங்கி பாராட்டியது.இவர் ஃபேஷன் ஷோ -,விலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.(Brand photoshoot-Little closet )அமைப்பில் பங்கேற்று சான்றிதழ் வழங்கி கௌரவித்தது.
இவருக்கு தன் அன்னை கின்னஸ் சாதனை பெண்மணி.கவிஞர்.முனைவர்.ப.நித்யா
( ஆசிரியர் மற்றும் சமூக பணியாளர்) சிங்கப் பெண் நூல் வெளியீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோவில் நடைபெற்ற சொற்பொழிவு நேர்காணலில் பங்குபெற்று சான்றிதழ் பெற்று அந்நாடு சாதனை சிறுமி.முனைவர்.சி.ஜான்வி அவர்களைக் கௌரவித்தது.
Previous Post Next Post