ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற தமிழக அரசின் வெற்றி பயணத் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆட்டோக்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் அல்லது ஆட்டோ தொழிலாளர்களுக்கு தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும், ஓலா, ஊபர், ரேப்பிடோ, பைக் டாக்சி போன்ற நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 200 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தாங்கள் கொடுக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தங்களை அழைத்துப் பேச சொல்லியும் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
இதில் தமிழகத்தில் உள்ள ஆட்டோக்களுக்கு முறைப்படி புதிய மீட்டர் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். எஃப்.சி. (FC) செய்ய ஆந்திரா மற்றும் புதுச்சேரி அரசுகள் வழங்குவது போல, தமிழக அரசும் ஆண்டுக்கு 15,000 வழங்க வேண்டும்.
ஆட்டோ தொழிலாளர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் வழங்க வேண்டும்.
தொழிலாளர்களுக்குத் தெரியாமலேயே அபராதம் விதிக்கும் ஆன்லைன் வழக்கு பதிவுகளைக் கைவிட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆட்டோக்களையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் அல்லது தொழிலாளர்களுக்குத் தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும்.
ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்ற தமிழக அரசின் ‘வெற்றிப் பயண திட்டத்தை’ மறுபரிசீலனை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்குப் பின் ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்க மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி வந்தனர்.