காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை தமிழ்நாடா - கொலைநாடா ? காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !



👉காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை தமிழ்நாடா - கொலைநாடா ? என்கிற கேள்வியை எழுப்பவதுடன் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தையும் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநிலத்தலைவர் காயல் அப்பாஸ் தெரிவித்து உள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

👉தேனி மாவட்ட காவல் கண்கானிப்பாளர் அலுவலகத்தில் பணி புரிந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் குமார் பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் சமதர்ம புரம் என்கிற பகுதியில் தீபாவளி இரவில் பொது மக்களுக்கு இடையூராக சாலையை மறித்து பட்டாசு வெடித்துசமூக வளைதலங்களில்  ரீல்ஸ் போட்டு கொண்டவர்களை தட்டி கேட்ட போது மது போதையில் இருந்த சமூக விரோதி கும்பல்கள் கடுமையாக தாக்கியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்த செந்தில் குமாரை பொது மக்கள் மற்றும் காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார் என்கிற செய்தி அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது.

👉மேலும். உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் குமார் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம். மேலும். செந்தில் குமார் குடும்பத்திற்கு இழப்பிடாக ரூ 1 கோடி வழங்குவதுடன் அவர் பிள்ளைகளுக்கு  அரசு வேலையும் உடனடியாக தமிழக அரசு இதனை தாமதிக்காமல் உடனடியாக வழங்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.

👉மேலும். தீபாவளி அன்று மட்டுமே சுமார் 10க்கும் மேற் பட்ட படு கொலைகள் சம்பவங்கள் நடை பெற்று இருக்கின்றன. மேலும் தமிழகம் முழுவதுமே கொஞ்சம் நாளாக படு கொலைகள் சம்பங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதனால் பொது மக்களிடையே பெரும் அச்சத்தையும்  ஏற்படுத்தி வருகிறது. மேலும். தொடர் கொலைகள் அரங்கேறி வருவதனால் தமிழ்நாடா ? கொலை நாடா ? என்கிற கேள்விகளும் பொது மக்களிடையே எழுந்துவுள்ளது.

👉எனவே: கைது செய்த மூன்று குற்றவாளிகளுக்கு சட்ட ரிதீயாக கொடுக்க படும் தண்டனை இனி காவல் துறையினர்கள் மீது தாக்குதல் நடத்த நினைக்கும் நபர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். மேலும். சட்டத்தைப் பாதுகாக்க கூடிய காவல்துறை அதிகாரிக்கே இந்த நிலமை என்றால் சாதாரண பொதுமக்களுக்கு ஏற்படும் நிலை என்னவாக இருக்கும் ? ஆகவே. இனி வருங்காலங்களில் இது போன்ற சம்பங்கள் நடை பெறாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
Previous Post Next Post