காயல் பட்டிணம் நவ1
இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
👉தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே சோட்டையன் தோப்பு பகுதியை சேர்ந்த பாலமுருகன் உறவினர் இல்லத்தில் நடை பெறும் நீராட்டு விழா சம்பந்தமாக டிஜிட்டல் பேனர் வைத்திருந்த போது அவ்வழியாக வந்த கும்பல் பால முருகனிடம் பேனர் வைப்பது சம்பந்தமாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். மேலும் இரவு நடந்த வாக்கு வாதத்தை மனதில் வைத்து கொண்டு காலையில் பேட்ரோல் பங் அருகில் நின்று கொண்டிருந்த பால முருகனை கொடூரமாக படு கொலை செய்ய பட்டதை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது.
👉மேலும் உயிரிழந்த பால முருகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.மேலும் இக்கொலையில் சம்பந்தபட்ட நான்கு நபர்களையும் உடனடியாக கைது செய்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர்களை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி பாராட்டுகிறது.
மேலும் கைது செய்ய பட்ட குற்றாவாளிகள் கூலிப்படையை சேர்ந்தவர்களை அவர்கள் மீது எந்த மாதிரியான வழக்குகள் பதிய பட்டிருக்கின்றன என்பதை தீவிர விசாரனைகளை மேற் கொண்டு இக்கொலைக்கான உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும்.
👉மேலும் பாலமுருகன் கொலையில் சம்பந்த பட்ட குற்றவாளிகள் சட்ட ரிதீயாக அதிக படியான தண்டனைக்கு உள்ளாக்க பட வேண்டும். ஏனென்றால் சாதாரண பேனர் விவகாரத்தில் இவ்வளவு துனிவாக படு கொலை செய்கிறார்கள் என்றால் இவர்கள் சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்தார்கள் என்றால் பணத்திற்க்காக அப்பாவி மக்களை படு கொலை செய்ய மாட்டார்கள் என்ன நிச்சயம் ? ஆகவே பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு இக்கொலையில் சம்பந்த பட்ட குற்றவாளிகளை பினையில் விடாமல் வாழ் நாள் முழுவதும் சிறை படுத்த வேண்டும்.என கேட்டு கொள்கிறோம்.
👉எனவே :தமிழகத்தில் படு கொலை போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன, ஆகவே இனிவரும் காலங்களில் இது போன்ற குற்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க தமிழக முழுவதும் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்ய பட்டு சிறையில் இருந்து பினையில் வெளி வந்தவர்களை முழுமையாக கண்கானிக்க படுவதுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்
காவல் துறை இயக்குனர் மகேஷ் குமார் அகர்வால்
தாமதம் இன்றி உடனடியாக எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பில் கேட்டு கொள்கிறோம். என்று காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.