மணப்பாறை நகரில் கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை


மணப்பாறை அக் 28
மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இயங்கும் ஆர் வி பி மன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர குழு கூட்டம் நடைபெற்றது 

இக்கூட்டத்திற்கு செல்வராஜ் தலைமை வகித்தார் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் மாவட்ட மாநில குழுக்களின் முடிவுகளை எடுத்துரைத்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில முன்னாள் நிர்வாக குழு உறுப்பினர் இந்திரஜித் அரசியல் உரை நிகழ்த்தினார்

மணப்பாறை நகரில் கோவில்பட்டி சாலையில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்டர் மீடியம் அமைக்கவும்  கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்கிடவும்

18 19 20 ஆவது வார்டுகளில்  வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியும்
மணப்பாறை நகரில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச சிறுநீர் கழிப்பிட வசதியை செய்து கொடுக்க வேண்டியும்

பேருந்து நிலையம் முன்பாகவும் காய்கறி மார்க்கெட் பகுதியிலும் கோவில்பட்டி சாலையிலும் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை சிக்னல் அமைத்து  சரி செய்ய போக்குவரத்து காவல்துறை  நடவடிக்கை  எடுக்க வேண்டி

18 வது வார்டு  காந்தி நகரில் உள்ள. 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட    எஸ் எஸ் ஒன்னு  250 KVA மின் மாற்றியை (டிரான்ஸ்பாரத்தை)          போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதை வேறு இடத்தில் மாற்றி  அமைக்க கூறியும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில்  ஜனசுக்கு உசேன் சுப்பிரமணியன் ராஜேந்திரன்  திருநாவுக்கரசு  சவுக்கத் அலி இப்ராஹிம் ரேணுகா முரளி ராஜா ஆரிப் துரைசாமி உட்பட நகர குழு தோழர்கள் பங்கேற்றனர்
Previous Post Next Post