மருத்துவத் துறையில் புதிய மைல்கல் – தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் பெருமிதம்!
வேலூர் மாவட்ட ஆட்சியர் சாலையில் அமைந்துள்ள நறுவீ மருத்துவமனையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 1,000-க்கும் மேற்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து மருத்துவமனைத் தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவமனை ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், தமிழகம், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.
குறிப்பாக, டாக்டர் வெர்ணன் லீ தலைமையிலான மூட்டு மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவில், அமெரிக்கத் தயாரிப்பான CORI ரோபோ தொழில்நுட்பத்தின் உதவியுடன் நவீன அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் நோயாளிகள் விரைவாகக் குணமடைய வாய்ப்பு ஏற்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும், ரத்தப் புற்றுநோய்க்கான எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையம் மற்றும் செயற்கைக் கருத்தரிப்பு மையம் ஆகிய இரண்டு சிறப்பு மையங்களும் விரைவில் சர்வதேசத் தரத்தில் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
1,000-க்கும் மேற்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் என்பது நறுவீ மருத்துவமனையின் மருத்துவச் சேவையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.
A. சரவணன்.
வேலூர் மாவட்டசெய்தியாளர்