நீதிமன்ற உத்தரவு: சாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக சாமா.சேட்டு மீண்டும் பொறுப்பேற்பு!இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு!

​ஆற்காடு, அக். 17:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியத்திற்குட்பட்ட சாத்தூர் ஊராட்சியின் தலைவராக சாமா சேட்டு என்பவர் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், இடையில் ஏற்பட்ட சில நிர்வாகக் காரணங்கள் மற்றும் பிரச்சனைகள் காரணமாக அவர் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

​தொடர்ந்து, தனது தரப்பில் உள்ள நியாயமான கோரிக்கைகள் மற்றும் விளக்கங்களை முன்வைத்து  நீதிமன்றத்தை அணுகினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் மீண்டும் சாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராகப் பணியாற்றிட உத்தரவு பிறப்பித்தது.

​நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட துறை சார்ந்த உயர் அதிகாரிகள் சாமா சேட்டுவை மீண்டும் ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கான அதிகாரப்பூர்வ ஆணையை வழங்கினர்.

​இதனைத் தொடர்ந்து, சாத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சாமா சேட்டு முறைப்படி ஊராட்சி மன்றத் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வின் போது, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சிச் செயலர் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

​நீதிமன்றத்தின் இந்த நேர்மையான தீர்ப்பை அடுத்து, கிராம மக்களும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து உற்சாகமாக வரவேற்றனர்
Previous Post Next Post