சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பின் படி தலைவர் பதவி வழங்க கோரி முன்னாள் தலைவர் சா.மா.சேட்டு ஆட்சியரிடம் மனு

இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஒன்றியத்திற்குட்பட்ட சாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் சா.மா.சேட்டுவின் பதவி நீக்க உத்தரவைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

​சாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராகச் சா.மா.சேட்டு பணியாற்றி வந்த நிலையில், அவருக்கும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்  இளங்கோவனுக்கும் இடையே அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன.

​இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 205(11)-இன் கீழ், சா.மா. சேட்டுவை தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து கடந்த 13.03.2026 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

​இவ்வுத்தரவை எதிர்த்துச் சா.மா. சேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் மனுவை விசாரித்த  சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 06.10.2026 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், தலைவர் பதவி நீக்கத்திற்கான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

​நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தற்போதைய ஊராட்சியின் பதவிக்காலம் வரும் 19.10.2026 வரை உள்ளதால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் சாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பேற்றுப் பணியாற்ற அனுமதி வழங்குமாறு இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சி ஆய்வாளரிடம் சா.மா. சேட்டு மனு அளித்தார்.
Previous Post Next Post