ஆற்காடு, அக். 12: ஆற்காடு பஸ் நிலையம் மற்றும் கண்ணன் பூங்கா அருகில், சுவையான உணவுப் பிரியர்களுக்காக புதியதாக "ஏ.எஸ். சிக்கன் பிரியாணி" கடை திறக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவில், ஆற்காடு முன்னாள் நகர மன்ற துணைத் தலைவரும், இந்நாள் நகர மன்ற உறுப்பினருமான பொன் ராஜசேகர் கலந்துகொண்டு புதிய கடையை ரிபன் வெட்டி திறந்து வைத்து சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் அப்பகுதி முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டு கடை உரிமையாளருக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். திறப்பு விழாவை முன்னிட்டு அப்பகுதி மக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டதுடன், பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து புதிய கடையைப் பார்வையிட்டுச் சென்றனர்.