கடப்பேரி என் மீட்பர் தேவாலயத்தில் 47-வது ஆண்டு விழா மற்றும் ஆலய விரிவாக்க அடிக்கல் நாட்டு விழா

வாலாஜா அடுத்த கடப்பேரி கிராமத்தில் இந்திய சுவிசேஷ திருச்சபை சென்னை பேராயத்தின் கீழ் செயல்பட்டு வரும்
 என் மீட்பர் தேவாலயத்தின் 47-வது ஆண்டு விழா மற்றும் ஆலய விரிவாக்க அடிக்கல் நாட்டு விழா சிறப்பு ஆராதனையுடன்  நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சிக்குக்  கடப்பேரி ஏரியா இயக்குனர் ஜோசப் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
​விழாவில் சென்னை பேராயர் கதிரொளிமாணிக்கம்  கலந்து கொண்டு சிறப்பு தேவச்செய்தி வழங்கி, ஆலய விரிவாக்கப் பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டி ஆசீர்வதித்தார்.

​இவ்விழாவில் கடப்பேரி சபை போதகர் அன்பு, ஏரியா போதகர்கள், மூப்பர் குழுவினர் மற்றும் திரளான சபை விசுவாசிகள் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர்.
Previous Post Next Post