திருவாரூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. மறியல் காரணமாக திருவாரூர்- திருத்துறைப்பூண்டி இடையே போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் பாதிப்பு.


திருவாரூர் அருகே மாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட முதலி சாத்தங்குடி கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் குடிநீர் கடந்த சில மாதங்களாக சரி வர வழங்குவதில்லை எனவும் நிர்வாகம் உரிய பதில் அளிக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு தெரிவித்து இன்று திடீரென மாங்குடி கடைவீதியில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டம் காரணமாக திருவாரூர்- திருத்துறைப்பூண்டி இடையே சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 
Previous Post Next Post