விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ரங்கபூபதி அவரது திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜரின் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு, லஞ்சத்திற்கு எதிரொக பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடந்தது. முன்னாள் முதல்வர் காமராஜரின் 124-வது பிறந்த நாளை முன்னிட்டு, விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், திண்டிவனத்திலுள்ள காமராஜர் சிலைக்கு வடக்கு மாவட்ட காங்.,தலைவர் வழக்கறிஞர் 
ரங்கபூபதி தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை பொதுமக்களுக்கு  அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து தாலுகா அலுவலகம் எதிரில் காமராஜர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது மேலும் தாலுகா அலுவலகம் எதிரில் லஞ்சம் தவிர்: நெஞ்சம் நிமிர் என்ற ஊழலுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை மாவட்ட காங்., தலைவர் துவக்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தவெக. மாவட்ட செயலாளர் சக்திவேல் நகரதலைவர்கள் வேந்தன்,யூத் மணி, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஓ.பி.சி.,பிரிவு தேசிய செயலாளர் மோகன்,நகர காங்., தலைவர் சத்தீஷ்குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட துணை தலைவர்கள் புலிமணி, மாவட்ட பொருளாளர் சிவா,மகளிர் அணி பத்மாவதி,நிர்வாகிகள் சுவாமிநாதன், குப்பன்,அர்சுனன், ஓம்சக்திசேகர்,வெங்கடேசன், ஸ்ரீராம், வட்டார தலைவர் அருமைசெல்வன்,மண்டல தலைவர் தேவசகாயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post