அதிகாலையில் பூ வியாபாரத்தில் ஈடுபட்ட நபர் திடீரென தரையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம் - மாரடைப்பால் உயிரிழப்பா என மருத்துவர்கள் பரிசோதனை.?சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு என்கிற கல்யாணசுந்தரம், பூ வியாபாரியான இவர் நேற்று காலை வழக்கம் போல  தேனி பழைய பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள பூ மார்க்கெட்டிற்கு வருகை தந்து தனது பணியினை தொடர்ந்து வந்தார்.

பூ விற்பனை செய்வதற்காக பூக்களை எடை போட்டு அதன் அளவை பேப்பரில் எழுதிக் கொண்டிருந்தபோது திடீரென தள்ளாடிக் கொண்டு பின்னோக்கி தரையில் விழுந்த நிலையில் மயக்கமடைந்தார்.

இதனால் பதறிப்போன அருகில் இருந்த சக வியாபாரிகள் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து முயற்சித்துப் பார்த்தும் அவர் நினைவு திரும்பாததால் அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்து உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர் உயிரிழந்த விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மாரடைப்பால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா என மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.

அதிகாலை வேலையில் சுறுசுறுப்பாக தனது பணிகளை மேற்கொண்டு இருந்த போது திடீரென கீழே விழுந்து பூ வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இதன் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.....
Previous Post Next Post