வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அவலம்: நோயாளிகளை மிரட்டி லஞ்சம் கேட்கும் வாட்ச்மேன்; நடவடிக்கை எடுக்கப் பொதுமக்கள் கோரிக்கை!

வேலூர்
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு பொது மருத்துவமனையில், பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலாளி ஒருவர் நோயாளிகளையும் அவர்களின் உதவியாளர்களையும் அவதூறாகப் பேசி, பணம் கேட்டு மிரட்டி வரும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்து

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையின் பழைய பிரசவ வார்டு மருத்துவக் கட்டிடத்தில், சங்கர் என்பவர் காவலாளியாக (வாட்ச்மேன்) பணியாற்றி வருகிறார். இவர், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளைப் பார்க்க வரும் உறவினர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அனுமதி மறுப்பது மட்டுமன்றி, உள்ளே செல்ல வேண்டுமானால் தனக்குக் கட்டாயம் பணம் தர வேண்டும் என்று வெளிப்படையாகவே  கேட்டு நிபந்தனை விதிப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

பணம் தர மறுப்பவர்களை மிகவும் அநாகரிகமான வார்த்தைகளால் பேசி, அவமரியாதை செய்வதையே இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இதுமட்டுமன்றி, இரவு நேரப் பணியின் போது மருத்துவமனைக்கு முறையான பாதுகாப்பு வழங்காமல், விழித்திருக்க வேண்டிய நேரங்கள் முழுவதையும் அவர் தூங்கியே கழிப்பதாகவும் வார்டில் இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நோயாளிகளுக்கும், பிரசவ வார்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

ஏழை, எளிய மக்கள் தங்களின் மருத்துவத் தேவைகளுக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையை நாடி வரும் நிலையில், அங்குள்ள காவலாளியின் இத்தகைய லஞ்ச ஒழிப்புச் செயல்களும், அநாகரிகமான அணுகுமுறையும் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே நோயாளிகளுடன் வந்து மன உளைச்சலில் இருக்கும் எங்களை, இந்த வாட்ச்மேன் பணம் கேட்டு மிரட்டுவதும், கெட்ட வார்த்தைகளால் பேசுவதும் வேதனையளிக்கிறது.
 பணம் கொடுத்தால் மட்டுமே உள்ளே விடுகிறார்," என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
 
எனவே, இந்த விவகாரத்தில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர்/டீன் (Dean) உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட காவலாளி சங்கர் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Previous Post Next Post