கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள்: நலத்திட்ட உதவிகள் மற்றும் ரத்ததான முகாம் நடத்திய தமிழக வெற்றி கழக நிர்வாகிகள்.!


கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில், காமராஜர் அவர்களின் திருவுருவ சிலைக்கு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கம்பம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தலைமையில், பொதுமக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து, தேனி மாவட்டம் கோம்பை பேரூராட்சியில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு, அவர்களிடம் ஆசி பெறப்பட்டது.

பின்னர், தேனி மாவட்டம் கோம்பை பேரூராட்சியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா அவர்கள் துவக்கி வைத்து, ரத்ததானத்தின் சிறப்புகள் குறித்தும், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்தும் பொதுமக்களிடையே உரையாற்றினார்.

இந்நிகழ்வுகளில் கம்பம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post