கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா: மாணவர்களுக்கு போட்டிகள், புத்தகப் பரிசுகள்

குமாரபாளையம், ஜூலை 15:
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நாராயண நகர் நடுநிலைப் பள்ளியில், கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா, விடியல் ஆரம்பம் அறக்கட்டளை சார்பில், அதன் தலைவர் விடியல் ஆர். பிரகாஷ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் பாரதி வரவேற்புரை ஆற்றினார். பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்களான ராமச்சந்திரன் மற்றும் ஓபுளி ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்காக கட்டுரைப் போட்டி மற்றும் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகர்மன்ற உறுப்பினர் அம்பிகா, டிஸ்கோ சம்பத், விடியல் ஆர். பிரகாஷ் ஆகியோர், கர்மவீரர் காமராஜர் அவர்களின் எளிமையான வாழ்க்கை, நேர்மை, கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய அர்ப்பணிப்பு, பொதுச்சேவை மற்றும் தன்னலமற்ற பணிகள் குறித்து மாணவர்களிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, "கர்மவீரர் காமராஜர் ஐயாவின் எளிமை, நேர்மை மற்றும் மக்கள் சேவை மனப்பான்மையைப் பின்பற்றி வாழ்வோம்" என்ற உறுதிமொழியை மாணவ, மாணவிகள் ஏற்றுக்கொண்டனர்.

கர்மவீரர் காமராஜர் பிறந்த தினத்தில் அனைவரும் அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை பழகிக் கொள்வோம் என்று மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்
இறுதியாக  ஆசிரியர் நவநீதன் நன்றி கூறினார்

நிகழ்ச்சியில் ஆசிரியர்களான நவநீதன், ஆரோக்கிய பிரபு, விஜியா, கோகிலா,ராஜாமணி, மற்றும் சமூக ஆர்வலர்களான ஜமுனா, தீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Previous Post Next Post