திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட சிறப்பு அரசு வழக்கறிஞர் கலைவாணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது தமிழ்நாட்டில் புதிதாக அரசாங்க வழக்கறிஞர்கள் நியமிப்பதற்கு நேர்முக தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அனைத்து மகளிர் நீதிமன்றங்களிலும் மகளிர் வழக்கறிஞர்களை அரசு மகளிர் வழக்கறிஞராக நியமிக்க பாதிக்கப்பட்ட பெண்களாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் இருந்தாலும், தங்களுக்கு ஏற்பட்ட துன்பம் துயரங்கள் எந்த விதமான அச்சமின்றி எளிதாக மனிதர்களிடம் எடுத்துச் சொல்வார்கள். ,அதன்படி அந்த உண்மைகளை நீதிமன்றத்திற்கு சொல்வது மிக சரியான தீர்ப்பு உரிய தீர்ப்பு கிடைப்பதற்கு வழி வகை ஆகும். ஆனால் ஆண் வழக்கறிஞர்களை மகளிர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர்களாக நியமித்தால் பெண்களாக இருந்தாலும் குழந்தைகளாக இருந்தாலும் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை சொல்வதற்கு அச்சப்படுவார்கள், கூச்சபடுவார்கள் அந்த சூழ்நிலையில் அந்த உண்மையை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். எனவே தமிழக முதலமைச்சர் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் அவர்களும் இந்த நடைமுறையை பின் பற்றி மகளிர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக மகளிரை நியமிக்க வேண்டும் என முன்னாள் மாவட்ட சிறப்பு அரசு வழக்கறிஞர் கை.கலைவாணன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து மகளிர் நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களாக மகளிர் வழக்கறிஞர்களை நியமிக்க தமிழ்நாடு முதலமைச்சர் , சட்டத்துறை அமைச்சர் முன் வரவேண்டும் என மன்னார்குடியில் மாவட்ட முன்னாள் அரசு சிறப்பு வழக்கறிஞர் அரசுக்கு கோரிக்கை.
தமிழர் களம் மாத இதழ்
0