தமிழக காவிரி விவசாயின் சங்கத்தின் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்துரை யாடல் கூட்டம் திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் கோட்டூர் அருகே இருள்நீக்கியில மாநிலத் துணைச் செயலாளர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களுக்கு காவிரி விவசாயின் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பேட்டியளித்தார் அப்போது எல் நினோ தாக்குதலால் மிகப்பெரும் பேரழிவை விவசாயிகள் சந்திக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. எனவே காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து குறிப்பாக ஏக்கர் ஒன்றுக்கு ₹15,000 வறட்சி நிவாரணமாக விவசாயிகளுக்கு வழங்கிட முன்வர வேண்டும். காவிரி டெல்டாவில் ஒட்டுமொத்தமாக குறுவை சாகுபடியை முழுமையாக இழந்துள்ளோம். சம்பாவும் கேள்விக்குறியாக உள்ளது.இதனால் வருமானத்தை இழந்த விவசாயிகள் வாழ்வதா? சாவதா ? என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டதை இன்றைய முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் கணக்கில் கொண்டு நிவாரணத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும். குறுவை இழந்த விவசாயிகள் நேரடி விதைப்பு செய்து அழிவதைப் பார்த்து பரிதவிக்கின்றனர். எனவே காப்பீடு செய்து உரிய இழப்பீடு பெற்று தர முன்வர வேண்டும். மாவட்ட நிர்வாகம் சார்பில் குறுவை பாதிப்பை 100 சதவீதம் பாதிக்கப்பட்டதாக தீர்மானம். நிறைவேற்றி காப்பீடு மூலம் உரிய இழப்பீடு வழங்க முன்வர வேண்டும். பண்ணை குட்டைகள் அமைக்க தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.மேலும் மண்ணை வெளியில் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். குறுவையை இழந்த விவசாயிகள் சம்பா சாகுபடியை துணிவோடு தூங்குவதற்கு ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் ஊக்க நிதியாக வழங்க முன்வர வேண்டும்.தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் தமிழக அரசு கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்து விவசாயிகளை பாதுகாக்க முன்வர வேண்டும்.தள்ளுபடி அறிவிப்பு வரும் வரை கடன் வசூல் நடவடிக்கை தடுத்து நிறுத்த வேண்டும். கூட்டுறவு துறை செயலாளர் 13 பக்கம் கொண்ட தள்ளுபடி அரசாணையால் ஒட்டுமொத்த விவசாயிகளையும் தற்கொலைக்கு தூண்டுகிற வகையில் தமிழக அரசு நடவடிக்கை அமைந்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேகதாற்று அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும் சட்ட விரோதமாக செயல்படும் டி.கே சிவகுமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடர வேண்டும்.மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 22 முதல் பிரச்சார பயணம் மேற்கொள்ளப்படும். ஜூலை 25-ல் திருவாரூரில் காவிரி டெல்டாவை மையமாக வைத்து வறட்சி நிவாரண மாநாடு நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க கோரி ஜூலை 25 ல் திருவாரூரில் சிறப்பு மாநாடு பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு...
தமிழர் களம் மாத இதழ்
0