ஆடி மாதம் அம்மன் கோயில்களுக்கு இலவச அரிசி, கேழ்வரகு வழங்கக் கோரி வாலாஜாவில் இந்து மக்கள் கட்சி மனு

வாலாஜா:
ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மன் திருக்கோவில்களுக்கு கூழ் வார்ப்பதற்காகப் பச்சரிசி மற்றும் கேழ்வரகு ஆகிய தானியங்களை இலவசமாக வழங்க வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சார்பில் வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

 இந்து மக்கள் கட்சியின் வேலூர் கோட்டத் தலைவர் எஸ்.கே. மோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் பார்த்திபன், ஒன்றியப் பொதுச் செயலாளர் குமார், வாலாஜா கிழக்கு ஒன்றியத் தலைவர் அன்பழகன், வாலாஜா ஒன்றியச் செயலாளர் மணிவண்ணன், வாலாஜா மேற்கு ஒன்றியத் தலைவர் பிரபாகரன், வாலாஜா கிளைப் பொறுப்பாளர் சீனிவாசன் மற்றும் மகளிர் அணித் தலைவி பரமேஸ்வரி ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 தொடர்ந்து துணை வட்டாட்சியர் முத்துக்குமாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட துணை வட்டாட்சியர், தானியங்கள் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இதே கோரிக்கையை முன்வைத்து அஞ்சல் அலுவலகத்தின் மூலமாக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டது
Previous Post Next Post