திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியம் தொடக்க நிலை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு என்னும் எழுத்தும் திட்ட இரண்டாம் பருவ பயிற்சி செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ண மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இப்பயிற்சி முதல் நாள் தமிழ், இரண்டாம் நாள் ஆங்கிலம் ,மூன்றாம் நாள் கணிதம் , இன்று நடைபெற்ற கணித பயிற்சியை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.மேலும் புதன்கிழமை இப்ப பயிற்சியை மாவட்ட உதவி திட்ட அலுவலர் மற்றும் கூடுதல் உதவி திட்ட அலுவலர் ஆகியோர் பார்வையிட்டு பயிற்சியின் நோக்கம் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கினர். இப்பயிற்சியில் 298 ஆசிரியர்கள் பங்கேற்றனர். செங்கம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகன் செங்கம் வட்டார கல்வி அலுவலர்கள் சகிலா மற்றும் உதயகுமார் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
செய்தியாளர் எபினேசர் பிரின்ஸ்.