தேனி மாவட்டம் பெரியகுளம் நெடுஞ்சாலை துறையின் அலட்சியம் பெண் உயிரிழப்பு.!!
மார்ச்;8
ஆவணம்;1
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா
தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகே உள்ள திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில், நெடுஞ்சாலை துறையினரால் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளதுநெடுஞ்சாலை துறையினரின் அலட்சியப் போக்கால் இப் பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் வேகத்தடைகளில் வெள்ளை நிற வர்ணம், பூசாததாலும், எச்சரிக்கை சமிக்ஞைகள் வைக்காததாலும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருவதோடு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. போடி குப்பிநாயக்கன் பட்டியில் இருந்து பெரியகுளத்தில் தனது இறந்த தம்பிக்கு ஏழாம் நாள் காரியம் செய்வதற்காக புது துணி எடுத்து வந்த கருப்பையா என்பவரது மனைவி அம்சவள்ளி என்பவர் தனது மகன் தீபக்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.கைலாசபட்டிகாலணி ராமர் கோவில் அருகே பெரியகுளம் நோக்கி திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது நெடுஞ்சாலைத்துறையினரால் விபத்தினை தடுக்கும் வகையில் போடப்பட்டிருந்த வேகத்தடையில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வண்ணம் வெள்ளை கோடுகள் இடாததால் இரு சக்கர வாகனத்தில் பின்னாள் அமர்ந்து வந்த அம்சவள்ளி நிலை தடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பெரியகுளம் - எண்ட புளி அருகே பைபாஸ் நான்கு வழிச்சாலை சந்திப்பின் அருகே போடப்பட்ட வேகத்தடை உள்ளிட்ட பிற வேகத்தடைகளிலும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை சமிக்ஞைகள் இடாமல் நெடுஞ்சாலை துறை அலட்சியம் காட்டி வருகின்றது . இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உயிரிழப்பிற்கு காரணமான தேசிய நெடுஞ்சாலை துறை பெரியகுளம் உட்கோட்ட நிர்வாகம் இனியாவது நடவடிக்கை மேற்கொள்ளுமா? பொறுத்திருந்து பார்ப்போம்...., உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத இவர்களது அலட்சியப் போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகுமோ.... என்று பொதுமக்கள் மற்றும் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து புலம்பி வருகின்றனர் .....