திண்டிவனத்தில் பாஜகவை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் தீடீர் சாலை மறியல் முயற்சியால் பரபரப்பு.




டில்லியில் நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து பாஜக மத்திய கல்வி துறை அமைச்சருக்கு எதிரியாக போராட்டம் நடத்திய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதை கண்டித்து பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்ட எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தியை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் ராகுல் கைதை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் திண்டிவனம் காந்தி சிலை அருகே விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ரங்கபூபதி, தலைமையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் திடீரென்று போலீஸ் தடையை மீறி காந்தி சிலை எதிரிலுள்ள செஞ்சி சாலையில்  மறியல் ஈடுபட முயன்றனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி,மறியல் செய்ய முயன்ற  நிர்வாகிகளை எச்சரித்து போலீசார் அங்கிருந்து வலுக்கட்டயமாக அப்புறப்படுத்தினர்.இதில் வழக்கறிஞர் 
விஜயன், 
புலி.மணி ,
முப்புலி கோவிந்தன், vm.சதீஸ், 
பட்டணம் கார்த்திக்,  ராமமூர்த்தி ,
பார்த்திபன்,
தில் குமார், 
 கானை சுரேஷ், 
மதன்குமார், 
 மெடிக்கல் வெங்கட், குபேந்திரன் ,
பர்ஷா,
 தஷ்ணா மூர்த்தி, 
அஜீஸ் ,
பொன்ராஜா, 
 ஜெய்கணேஷ் ,
சூரி.சுரேஷ் ,
கண்ணன், 
சாமிநாதன், 
 அரிச்செல்வம்,
 ஜெகதீஸ் ,
கணேஷ் குமார்,
மஸ்தான், 
இம்தியாஸ், 
கோவிந்தராஜ்,
ஆனந்த்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post