ஆற்காடு, ஜூலை 15:
பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்த நாளை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு தமிழ்நாடு வெற்றிக் கழகம் (TVK) சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு TVK மாவட்ட செயலாளர் விஜய் மோகன் மற்றும் ஆற்காடு நகர செயலாளர் வினோத் ஆகியோர் தலைமை தாங்கினர். அவர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு 500 மேற்பட்டோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கட்சியின் மாவட்ட, நகர மற்றும் உள்ளூர் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று பெருந்தலைவர் காமராஜரின் கல்வி மற்றும் சமூகப் பணிகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர்.