ராணிப்பேட்டை புனித ஆரோக்ய அன்னை ஆலய 96 ஆம் ஆண்டு பெருவிழா சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் பங்குத்தந்தை ஞானசேகர் தலைமையில் நடைபெற்றது.


கூட்டத்தில் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அலங்கரிக்கப்பட்ட புனித ஆரோக்கிய அன்னையின் திருவுருவம் பதித்த கொடியை ஏற்றுவது. செப்டம்பர் எட்டாம் தேதி புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழாவை சிறப்பாக கொண்டாடுவது 
வேலூர் மறை மாவட்ட ஆயர் அம்புரோஸ் பிச்சை முத்துவை சிறப்புடன் வரவேற்று சிறுவர் சிறுமியர்களுக்கு புது நன்மை மற்றும் உறுதி பூசுதல்  வழங்குவது, புனித காபிரியேல்  சம்மனசு, திருஇருதய ஆண்டவர், புனித ஆரோக்கிய அன்னை ஆகியோரின் மூன்று திருத்தேர்களை வானவேடிக்கையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்வது, சிறப்பு ஆண்டு தியானத்தை நடத்துவது, 
ராணிப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலய பங்கு உருவாகி நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் நுழைவாயில் கோபுரம் அமைப்பது, ஆலய 96 ஆம் ஆண்டு  பெருவிழாவினை வெகு விமர்சையாக கொண்டாடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கு ஆலோசனை குழுவினர் விழா குழுவினர் பக்த சபையினர் பாடல் குழுவினர் இளைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் பங்குத்தந்தை ஞானசேகர் நன்றி கூறினார்.
Previous Post Next Post